போர் நிறுத்த பேச்சுவார்தை! ட்ரம்பின் எச்சரிக்கையின் பின்னர் கிடைக்கப்பெற்ற சாதகமான பதில்
சவூதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சாத்தியமான அமைதி முயற்சி குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட ரஷ்யா(Russia) தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ரஸ்ய- உக்ரைன்(Ukraine) போரை நிறுத்துவதில் தீவிரமாக இருந்து வருகின்றார்.
ரஸ்ய- உக்ரைன் போர்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு தனது ஆதரவு நிலைப்பாட்டை வழங்கியிருந்தாலும் ட்ரம்ப் ரஸ்யா சார்பாக இருப்பதை காண முடிகின்றது.
இந்தநிலையில் ரஸ்ய ஜனாதிபதி புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து, சவூதி அரேபியாவில் கடந்த மாதம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
குறித்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படாமைக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் ட்ரம்புடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வாக்குவாதத்தில் முடிந்தது.
அதனை தொடர்ந்து ட்ரம்ப் உக்ரைனுக்கான சில உதவிகளை நிறுத்தினார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
என்னால் பொருளாதார ரீதியில் பல விடயங்களைச் செய்யமுடியும், அவை ரஷ்யாவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், அதை நான் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால், நான் அமைதியை விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
சாதகமான பதில்
நேற்றையதினம் சவூதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைகளும்இடம்பெற்றுள்ளது.
ஜெலன்ஸ்கியும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ட்ரம்பின் எச்சரிப்புக்கு ரஷ்யா பணிந்துள்ளதுபோல் நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது.
விரைவில், சொல்லப்போனால் இன்றே அமைதி தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் விவாதிக்கத் தயார் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
