ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு ரஷ்யாவிலிருந்து எதிர்ப்பு
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை சேர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் மூலம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த தீர்மானம் கியூபாவில் நிதி மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற நடவடிக்கை
கியூபா பயங்கரவாத எதிர்ப்பு மீதான சர்வதேச ஒத்துழைப்பில் தீவிரமாக பங்கேற்பதால் இந்த நடவடிக்கை நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடியான தீர்மானங்களை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |