ரஷ்யாவை கதிகலங்க வைத்த தாக்குதல் : இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஸ்கோவில் இருந்து கிடைத்த தகவலின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்
இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது என்று ஐ.நா தெரித்துள்ளார்.
இந்த சோகமான நேரத்தில் ரஷ்யாவுடன் தான் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கும், ரஷ்ய அரசுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான், கியூபா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.