ஒரே இரவில் உக்ரைனில் 600 வீரர்களை கொன்று குவித்த ரஷ்யா
உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைனின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ பலம் மிகுந்து காணப்படும் இடங்களை குறிவைத்து நேற்றிரவு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான போலந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள பால்டிக் கடலில் புதன்கிழமை நடைபெற்ற போர் பயிற்சிக்களின் போது, ரஷ்யா அணுசக்தி திறன் கொண்ட இஸ்கண்டர் மொபைல் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகளின் உருவகப்படுத்தப்பட்ட "எலக்ட்ரானிக் ஏவுகணைகளை" தாக்குதல் பயிற்சி செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்போது போலியாக அமைக்கப்பட்ட ஏவுகணை அமைப்புகள், விமான நிலையங்கள், பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, இராணுவ உபகரணங்கள் மற்றும் எதிரியின் கட்டளை நிலைகள் மீது ஒற்றை மற்றும் பல தாக்குதல்களை நடத்தி பயிற்சி செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.