உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா பாரிய குண்டுவீச்சு தாக்குதல்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா பாரிய குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் 08 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஒரு நிர்வாகக் கட்டிடமும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் தாக்குதல்
முதல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்புக் குழுக்கள் இடிபாடுகளினுள் தேடிக்கொண்டிருந்தபோது, பிற தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நகரமானது, பல மாதங்களாக பதட்டமான சண்டை நடந்து வரும் போர்கோவ்ஸ்க் நகரத்திலிருந்து அருகில் உள்ள பிராந்தியம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யப் படைகள் அந்த நகரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருவதோடு? தெற்கு புறநகர்ப் பகுதியின் நில இடங்களை அவர்கள் அடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam