சரமாரியாக ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - பற்றியெரியும் உக்ரைன்
உக்ரைன் உடன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப் பெரிய வான்வெளி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், இதனால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ்ன் மையத்தில் உள்ள பரபரப்பான சந்திப்புகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனில் உள்ள Lviv, Ternopil மற்றும் Zhytomyr, மத்திய உக்ரைனில் Dnipro மற்றும் Kremenchuk, தெற்கில் Zaporizhzia மற்றும் கிழக்கில் Karkiv ஆகிய இடங்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். அத்துடன் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பகல் முழுவதும் தொடர் தாக்குதல்
பகல் முழுவதும் வான்வழித் தாக்குதல் தொடர்ந்தைமையினால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் முகாம்களுக்கு ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் ஆரம்பிக்கப்பட்ட நாளை போன்று இன்றைய தினம் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மேற்கொண்ட மிகப் பெரிய வான்வெளி தாக்குதல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிரிமியன் தீபகற்பத்துடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்த தாக்குதல்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வார இறுதியில் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
WARNING: GRAPHIC CONTENT - Russia struck cities across Ukraine during rush hour, killing civilians and destroying infrastructure in apparent revenge after President Vladimir Putin declared an explosion on the bridge to Crimea to be a terrorist attack https://t.co/b3WkG42SN8 pic.twitter.com/Rsfyv2Xdyc
— Reuters (@Reuters) October 10, 2022
இந்நிலையில், ரஷ்ய தாக்குதல்கள் வேண்டுமென்றே மக்களைக் கொல்வதற்காகவும், அதே போல் உக்ரைனின் மின் கட்டமைப்பை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். அத்துடன், இராணுவ நோக்கமின்றி இலக்குகளை அழித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரேனிய மக்கள் மீது புடினின் சட்டவிரோதப் போரின் முழுமையான மிருகத்தனத்தை அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா ஆழ்ந்த கவலை
இதனிடையே, உக்ரைனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், வரும் வாரங்களில் போர் தீவிரத்தை குறைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Our response to media queries on escalation of conflict in Ukraine:https://t.co/LoELjRwDEm pic.twitter.com/jCNHw95UKw
— Arindam Bagchi (@MEAIndia) October 10, 2022
பகைமையை அதிகரிப்பது எவருக்கும் விருப்பமில்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், உடனடியாக போரை நிறுத்தவும், இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதைக்கு அவசரமாக திரும்பவும் வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.