ரஷ்யா மீது பாரிய தாக்குதல் மேற்கொண்ட உக்ரைன்: தடுத்து அழிக்கப்பட்ட 11 ஆளில்லா விமானங்கள்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனில் இருந்து 11 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் ரஷ்யா தடுத்து அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்ட சூழலிலே குறித்த தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர்
இது தொடர்பில் மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது, மொத்தம் 45 ஆளில்லா விமானங்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
இதில் யாருக்கும் பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உக்ரைனின் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் 50 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டன என குறிப்பிடப்பட்டு்ள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மொத்தம் 72 வான்வழி பகுதிகளை இலக்காக கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என உக்ரைனின் விமான படை தளபதி மிகோலா ஒலெஸ்சக் கூறியுள்ளார்.
அவற்றில் கீவ் நகரமும் அடங்கும். அவற்றை மறித்து தாக்கி அழித்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.