ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி
அபுதாபியிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த விமானத்தில், ரஷ்ய பிரஜை ஒருவரின் கைப்பையிலிருந்து 9,900 அமெரிக்க டொலர்களைத் திருடப்பட்டுள்ளது.
இந்த பணத்தை திருடியதாகக் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணம் இலங்கை பணத்தில் சுமார் 31 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையதென தெரியவந்துள்ளது.
விமானத்தில் கொள்ளை
இந்தத் தொகையை திருடிய சந்தேக நபர், கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள கேசினோ ஒன்றில் தங்கியிருந்தபோது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிரேஷ்ட புலம்பெயர்வு மருத்துவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எட்டிஹாட் விமானச் சேவையின் EY-394 என்ற விமானத்திலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய மருத்துவர் பயணத்தின்போது உறங்கிக்கொண்டிருந்த வேளையில், பொதி வைக்கும் பகுதியில் இருந்த அவரது கைப்பையிலிருந்து 49 வயதான சீனப் பிரஜை பணத்தைத் திருடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam