ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும்! அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யா இரசாயன ஆயுதங்களைக் கொண்டு உக்ரேய்ன் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிரியல் ஆயுதங்களையோ அல்லது இரசாயன ஆயுதங்களையோ உக்ரேய்ன் மீது ரஷ்யா பிரயோகிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படுவதாக ரஷ்யா சுமத்தும் குற்றச்சாட்டுக்கள், உக்ரேய்ன் மீது இவ்வாறான தாக்குதல்களை நடாத்தி அதனை நியாயப்படுத்தும் நோக்கிலானது என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் Jen Psaki தெரிவித்துள்ளார்.
மரபு ரீதியற்ற யுத்த வழிமுறைகளை ரஷ்யா பயன்படுத்தக் கூடும் என ஏனைய மேற்குலக நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் நிதி உதவியுடன் உக்ரேய்னில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ரஷ்யா தூதரகம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.