ரஷ்யாவுக்கும் ஈழத் தமிழருக்கும் Cluster குண்டுகள் ஒன்றும் புதிதல்ல!(Video)
உக்ரைன் களமுனைகளில் அமெரிக்கா வழங்கிய "cluster குண்டுகள்" உக்ரேன் பாவிக்க ஆரம்பித்துவிட்ட விடயம்தான் இப்பொழுது பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள “cluster bombs” காரணமாக ரஷ்யப் படைகள் பல இடங்களில் பின்வாங்கி ஓடிக்கொண்டிருப்பதாகவும், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பங்கர்கள் அமைத்து பாதுகாப்பான நிலைகளை எடுத்து சண்டையிட்டுக்கொண்டிருக்கின்ற ரஷ்யப்படைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகப்போவதாகவும்- மேற்குலக ஊடகங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன.
அமெரிக்கா வழங்கியுள்ள “cluster குண்டுகள்”ஐ உக்ரைன் படைகள் பாவித்தால் கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரஷ்யத் தரப்பு எச்சிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒருபடி மேலே சென்று, ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியங்களில், விதம் விதமான cluster bombs பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவும் அவற்றினைப் பயன்படுத்தப்போவதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கொத்துக்குண்டுகள் தொடர்பான ஒரு ஆழமான பார்வைச் செலுத்துகின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி...