ரஷ்யா - சீனா அச்சுறுத்தல்: நேட்டோ வகுக்கும் முக்கிய திட்டம்
நேட்டோவின் உள்கட்டமைப்பை குறிவைத்து நாசவேலைகளை செய்யும் ரஷ்ய மற்றும் சீனவிடம் இருந்து தமது பாதுகாப்பை தீவிரப்படுத்த உளவுத்துறையின் ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோவின் வெளியுறவு பிரதிநிதிகள் பெல்ஜியத்தில் கூடியபோது அதன் பொதுச்செயலாளர் மார்க் ரூட் (Mark-rutte)இந்த திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஸ்வீடனையும் பின்லாந்தையும் இணைக்கும் தகவல் பறிமாற்ற வடங்களில் ஏற்பட்ட சேதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோதே இதனை கூறியுள்ளார்.
ரஷ்யாவும் சீனாவும்
இது சந்தேகத்தைத் தூண்டும் சமீபத்திய சம்பவம் என்றும் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டுகளில், ரஷ்யாவும் சீனாவும் நாசவேலை, சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் மற்றும் எரிசக்தி அச்சுறுத்தல் ஆகியவற்றின் மூலம் நமது நாடுகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சித்ததாக மார்க் ரூட் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, நேட்டோ நட்பு நாடுகள் அதிக உளவுத்துறைப் பகிர்வு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து ஒன்றாக நிற்கும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
