தீவிரமடையும் போர்: மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா
கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய(Russia) பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்(Ukraine)-ரஷ்யா இடையிலான போர் ஆரம்பமாகி மூன்று ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு தரப்பிலும் சாத்தியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக நிலத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள்
இந்த நிலையில், உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள நோவோம்லின்ஸ்க் கிராமத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
அங்கு இரு படைகளையும் பிரித்த ஆஸ்கில் நதியை ரஷ்யாவின் படைகள் கடந்துவிட்டன.
அதேபோல் பல மாதங்களாக முன்னேறி வரும் மாஸ்கோ துருப்புகள், Ocheretyne நகருக்கு வடக்கே உள்ள பரனிவ்காவையும் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு உக்ரைனில் கிட்டத்தட்ட தினசரி வெற்றிகளை ரஷ்யா பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |