தேவாலயத்தில் 45 அடி நீளமான அகழியை தோண்டி அப்பாவி மக்களை புதைத்த ரஷ்யா! உக்ரைன் குற்றம் (PHOTOS)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 41ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகின்றது.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா ஏவுகணை மற்றும் குண்டு தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சிதைந்து வருகின்றது. பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில்,உக்ரைன் நாட்டில் புச்சா நகரில் தேவாலயத்தில் 45 அடி நீள அகழி ஒன்று இருப்பதாகவும் அங்கு மக்கள் புதைக்கப்பட்டு கல்லறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் புச்சா நகரிலும் ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திவிட்டு மார்ச் மாதம் இறுதியில் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளது.
இந்நிலையில், புச்சா நகரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் 45 அடி நீளத்திற்கு அகழி ஒன்று புதிதாக தோண்டப்பட்டுள்ளமை குறித்து புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.
இந்த அகழியை அப்பாவி மக்களை அடக்கும் செய்யும் கல்லறையாக ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைனிய துருப்புக்களால் மீட்கப்பட்ட நகரங்களில் புச்சாவும் ஒன்று. ரஷ்யப் படைகள் புச்சா நகரத்தில் ஒரு "படுகொலை" நடத்தியதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக ரஷ்யா மறுத்துள்ளதுடன், இது உக்ரைனின் "ஆத்திரமூட்டும் நடவடிக்கை" என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.