அதிகரித்துள்ள போர் பதற்றம் : உக்ரைன் மீது ரஷ்யா இராட்சத குண்டு தாக்குதல்
உக்ரைனின்(Ukraine) ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா அதி பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக நேட்டோ, வொஷிங்டனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
குறித்த அறிவிப்புக்கு பிறகு, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்து உள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய இராணுவம் (VKS or RuAF) சமீபத்தில் உக்ரைனிய இராணுவ தளத்தை குறிவைத்து அவர்களின் மிகப்பெரிய குண்டுகளில் ஒன்றான FAB-3000 குண்டைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, Su-34 குண்டுவீச்சு விமானம் 3 டன் குண்டை ஏற்றுவதையும், பின்னர் போர்க்கால நடவடிக்கையின் போது அதை வீசுவதையும் காட்டும் காட்சிகளை அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளியில், FAB-3000 குண்டு விடுவிக்கப்படுவதையும், அதன் இறக்கை போன்ற துடுப்புகள் விரிவடைந்து தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு அதை நிலைப்படுத்தும் காட்சிகளும் உள்ளன என கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |