ஐரோப்பிய சரக்கு தீ விபத்துகளுக்கு ரஷ்யாவே காரணம்: பிரித்தானிய பொலிஸார் அதிரடித் தகவல்
ஐரோப்பா முழுவதும் சரக்கு விமான நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் ஏற்பட்ட மர்மத் தீ விபத்துகளுக்குப் பின்னால் ரஷ்யாவின் இராணுவ உளவுத்துறை (GRU) இருப்பதாகக் பிரித்தானிய பொலிஸார் மற்றும் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூலை 2024-ல் பர்மிங்காமில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை விசாரித்த லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
விசாரணையில் ஒருவர் கைது
லிதுவேனியா, போலந்து, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தச் சர்வதேச விசாரணையில், மின் சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்ற பார்சல்களில் வெடிபொருட்களை மறைத்து வைத்து அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அவை சரக்கு விமானங்களில் இருக்கும் போது அல்லது கிடங்குகளில் இருக்கும் போது வெடித்துச் சிதறச் செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய ருமேனிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் விநியோகச் சங்கிலியைச் சீர்குலைக்கவும், அந்நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் ரஷ்யா இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்துகள் விமானங்களில் ஏற்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு நெறிமுறைகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த 'நிழல் போர்' உத்திகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri