ரஷ்யாவிற்குள் நுழைய பிரித்தானிய பிரதமருக்கு தடை விதிப்பு!
உக்ரைனுக்கு எதிரான போரில் பிரித்தானியாவின் "விரோதமான" நிலைப்பாட்டின் காரணமாக, பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உள்ளிட்ட 10 மூத்த அரசியல்வாதிகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்ததையடுத்து பிரித்தானியா விதித்துள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் பிரித்தானிய அரசு செய்து வருகிறது.
மேலும், ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளதுடன், சொத்துகளையும் முடக்கியுள்ளது. மார்ச் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராகவும் மொஸ்கோ இதேபோன்ற தடையை விதித்தது.
இது குறித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, "ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட லண்டனின் கட்டுப்பாடற்ற தகவல் மற்றும் அரசியல் பிரச்சாரம், உள்நாட்டுப் பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக” கூறியுள்ளது.
ரஷ்யாவிற்கு நுழைய தடைவிதிக்கப்பட்டவர்களின் முழு விபரங்கள்....
• Prime Minister Boris Johnson
• Foreign Secretary Liz Truss
• Defence Secretary Ben Wallace
• Deputy Prime Minister, Lord Chancellor, and Secretary of State for Justice Dominic Raab
• Secretary of State for Transport Grant Shapps
• Home Secretary Priti Patel
• The Chancellor Rishi Sunak
• Minister for Entrepreneurship, Energy and Industrial Strategy Kwasi Kwarteng
• Minister for Digital, Culture, Media and Sport Nadine Dorries
• Minister for the Armed Forces James Heappey
• First Minister of Scotland Nicola Sturgeon
• Attorney General for England and Wales and advocate general for Northern Ireland Suella Braverman
• Conservative MP and former British Prime Minister Theresa May