கிறிஸ்துமஸ் தினத்திலும் மனிதாபிமானம் இல்லாது செயற்பட்ட ரஷ்யா!
கிறிஸ்துமஸ் தினமான இன்று(25.12.2024) உக்ரைனின் எரிபொருள் கட்டமைப்பொன்றின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
மொத்தம் 184 ஏவுகணைகள் ரஷ்யப் படையால் அனுப்பப்பட்டதாகவும் இவற்றுள் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
எனினும், தாக்குதலின் மூலம், குறித்த எரிபொருள் கட்டமைப்பில் 80% நாசமாகியுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது தாக்குதல்
இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ள போதிலும், இதுவரை புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலினால், உக்ரைன் தலைநகர் உட்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்த வருடத்தில் உக்ரைனின் எரிசக்தி துறை மீது நடத்தப்பட்ட 13ஆவது தாக்குதல் என உக்ரைனிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
