கிராமியப் போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மீளாய்வுக் கூட்டம்
துறைமுகங்கள், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார தலைமையில் நடைபெற்றது.
அதன்போது ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கிராமியப் பிரதேசங்களில் பேருந்து சேவை
கிராமியப் பிரதேசங்களில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது லாபமான செயற்பாடல்ல. எனினும் அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாவது அதனை செயற்படுத்த வேண்டும்.
அத்துடன் கிராமியப் பிரதேசங்களில் கூடுதலான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




