சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலில் பல மில்லியன் மோசடி!
சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலில் 527 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ஓட்டோ மொபைல் சங்கத்துக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2023,2024 ஆம் ஆண்டுகளில் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கோபா குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.
குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
2020, 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வு திணைக்களத்தின் ஆய்வறிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட போதே கோபா குழுவில் குறித்த மோசடி தொடர்பில் தெரியவந்துள்ளது.
கோப்பா குழு முன்னிலையில் போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.
சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது இலங்கை ஓட்டோ மொபைல் சங்கத்தினால் வெளியிடப்பட்ட, விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 2023 மட்டும் 2024 ஆண்டுகளில் 527 மில்லியன் அறவிட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இந்நாட்டுக்கு வருகை தரும் போது எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி, அவர்களிடம் 8,466 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரங்கள்
விண்ணப்பிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் கால் விரல்கள், கைகள்,கண்பார்வை போன்றன பரிசோதனை செய்யப்படாமல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஓட்டோ சங்கத்தினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்துக்கமைய இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு இலங்கை ஓட்டோ மொபைல் சங்கமே அங்கீகாரம் பெற்றுள்ளது.
லங்கா ஓட்டோ மொபைல் சங்கம் வழங்கும் இந்த வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உலகில் 160 நாடுகளில் செல்லுபடியானது என தெரிவிக்கப்படுகிறது.




