கிராமப்புற பாடசாலைகளின் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள தீர்மானம்
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் மேலதிக ஆசிரியர்களை வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றும் தீர்மானமொன்றை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
அதன் பிரகாரம் கிராமப் புற பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இடமாற்றம்
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் அவ்வாறான மேலதிக ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும்இ 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் பிரதிக் கல்வி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 20 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
