கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம்
கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று(23.1.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிண்ணியா நகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்ற பைசல் நகர், அண்ணல் நகர், ஆலங்கேணி, மாஞ்சோலைச் சேனை போன்ற பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கூடுதல் நீளங்களை கொண்ட வீதிகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
அபிவிருத்தித் திட்டம்
அதன் அடிப்படையில் முதலாவதாக கூபா நகர் ஜும்ஆ பள்ளியின் முன்னாலுள்ள 870 மீற்றர் நீளமான வீதியை புனரமமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.
நீண்டகாலமாக புனரமைப்பு செய்ய படாத வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


