இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

யூரோ மற்றும் பவுண்டின் பெறுமதி
அதேவேளை, யூரோ எதிராக ரூபாவின் பெறுமதி 40.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 39.8 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜப்பானிய யென்னுக்கு எதிராக 35.1 சதவீதம் மற்றும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதம் என்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி இந்திய ரூபாவிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 41.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மே 13 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி ஸ்திரப்படுத்தல் கொள்கைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்து பெற்று வருவதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri