இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.'
எவ்வாறாயினும், கடந்த வருடம்(2021) மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் மே மாதம் அனுப்பப்பட்ட பணம் மிகக் குறைவானதாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தொகை

ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் அனுப்பி தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதேசமயம் மே மாதம் அவர்கள் அனுப்பிய பணம், 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த வருடம் மே மாதம் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 460.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam