சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டதா? ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவித்தல்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதியுடன் முதிர்ச்சியடையும், 500 மில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்கு தேவையான அந்நிய செலாவணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
CBSL has allocated the required #Forex for the USD 500 million #ISB that is maturing on 18 Jan 22. It's a shame that some #investors lost out becoz of organized negative stories spread by certain vested interests. @CBSL #SriLanka #GoSL
— Ajith Nivard Cabraal (@an_cabraal) January 5, 2022
இலங்கை மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கணக்குகளில் காணப்படும் டொலர் பெறுமதிகள் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய வணிக வங்கிகள் இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் காணப்படும் அந்நிய செலாவணி பெறுமதிகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில நாசகார சக்திகள் இவ்வாறு போலித் தகவல்களை பரப்பி வருவதாகவும் இந்த வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
Rumors spread by some mischievous elements that Sri Lankan #banks have been ordered by @CBSL to forcibly convert balances in their customers' #Forex accounts are totally false. #SriLanka #Fakenews
— Ajith Nivard Cabraal (@an_cabraal) January 5, 2022
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam