ஆளும் கட்சி தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கை
யுக்திய நடவடிக்கையால் பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் (Samanpriya Herath) குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சில பொலிஸ் நிலையங்களினால் சிறு குற்றங்களுக்காக கூட யுக்திய நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பாவிகள் கைது செய்யப்படுகின்றனர்.
குற்றவியல் சட்டம்
அத்துடன், அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 54இன் கீழ் நியாயமற்ற முறையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், குருநாகல் மாவட்டத்தில் சந்திகளிலும் வீதிகளிலும் உடல் நலிந்த நிலையில் நடமாடும் இளைஞர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 54இன் கீழ் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
நேற்று நாரம்மலாவில் நடந்த சண்டையின்போது பதினொரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒரு பாடசாலை சிறுவன் உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
நாரம்மல பொலிஸ் பொறுப்பதிகாரி மிகவும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் மீது 54 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அவர்கள் போதைக்கு அடிமையாகியே மீண்டும் சமூகத்திற்கு வருகிறார்கள்.
யுக்திய நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், சில பொலிஸ் அதிகாரிகள் அதனை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, குறித்த சம்பவங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுப்பது தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
