தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவகப் பகுதிகளுக்கு நேற்று (27) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர்.
வைத்தியசாலைக்கும் விஜயம்
அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.

பின்னர் அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வேலணை மற்றும் மண்டைதீவுகளுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியசாலைகளின் நிலவரங்களை ஆராய்ந்தனர்.
You may like this...


ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri