விசத்தை உட்கொள்ள நேரிடும்! அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஆளும் கட்சி எம்.பி.
அரசாங்கம் இன்று நிர்வாணமாக இருக்கின்றது என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஒரு திட்டத்தின் அடிப்படையில் சேதன உரப் பயன்பாட்டுக்கு விவசாயிகளை பழக்கப்படுத்தியிருந்தால், அது வெற்றியளித்திருக்கும். நாம் சேதன உரத்தைப் பயன்படுத்தி வந்தோம் பின்னர் கிரமமாக மேற்குலகின் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி அதற்கு பழக்கப்பட்டுவிட்டோம். இதனால் விவசாயத்திலும் நாம் காற்சட்டை அணிந்திருந்தோம்.
இந்த காற்சட்டையை நாம் கழற்ற வேண்டும், அல்லாவிட்டால் நாம் விசத்தையே உட்கொள்ள நேரிடும். எனினும், காற்சட்டையை கழற்றி விட்டு சாரம் அணிவதற்கான திட்டம் சரியாக வகுக்கப்படவில்லை. சாரம் இல்லை என்பதற்காக நாம் காற்சட்டையை மீண்டும் போடமுடியாது.
இன்று காற்சட்டையும் இல்லை, சாரமும் இல்லை. இதனால் நிர்வாணமாக இருக்க நேரிட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைமையும் இன்று இதே விதமாக காணப்படுகின்றது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam