மருத்துவமனை ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் இதுவே: ருக்சான் பெலன்ன சாடல்
மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இதுவரை மேற்கொண்டு வந்த போதைப்பொருள் வணிகத்தை தொடர முடியாமல் போனதாலேயே அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவரும் தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளருமான ருக்சான் பெலன்ன சாடியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை அடுத்து, பொலிஸ் மா அதிபர் மருத்துவமனைக்கு விஜயம் செய்து மருந்து விற்பனையை நிறுத்தும் வகையில் பொலிஸ் பிரிவை நிறுவினார்.
மருத்துவமனையில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எம்மை விரட்டியடிக்கும் வகையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஊழியர்கள் ஒன்று கூடி போராட்டங்களை நடத்தினர்.
இந்தநிலையில் போதைப்பொருள் வணிகர்களை கண்டு பிடிக்க பொலிஸின் உளவுத்துறையும் மருத்துவமனைக்குள் செயற்பட்டு வருகின்றனர்.
வைத்தியசாலைகளில் போதை விற்பனை
போதைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைக்குள்ளேயே போதை மருந்துகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஊழியர்களில் சிலர் போதை மருந்துக்களை பயன்படுத்திய பின்னரே நோயாளிகளை கவனிக்கின்றனர்.
மேலும், பல நோயாளிகள் தங்கள் பொருட்கள் திருடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
மருத்துவர்களின் மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மருத்துவமனையின் அருகே நிறுத்தப்படும் வாகனங்களின் பாகங்களும் திருடப்படுகின்றன. கொழும்பு தேசிய மருத்துவமனையில் 1,500 மருத்துவர்கள், 3,300 செவிலியர்கள், 3,000 கனிஸ்டநிலை ஊழியர்கள் உட்பட மொத்தம் 11,000 பேர் பணியாற்றுகின்றனர்.
இதேவேளை, மருத்துவமனையில் பொலிஸ் நிலையத்தை நிறுவியதையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் சிற்றூழியர்களும் மருத்துவமனையின் அருகில் உள்ள முச்சக்கரவண்டி மாபியாக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த பணியாளர்களை மருத்துவமனையில் இருந்து அகற்ற அரச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
