அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமை குறித்து அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு!
பேச்சுவார்த்தையின் மூலம் அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.
இந்த வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருக்குமானால், சுகாதார சேவையினரின் தற்போதைய தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருக்காது என்று அரச மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ருக்ஷான் பெலன்ன தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தாம் வரவேற்பதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொழிற்சங்க போராட்டத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட நீதிமன்ற தடையாணையை ஊடகங்கள் வெளியிட்ட நிலையிலும், தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று போராட்டத்தை தொடர்வது யதார்த்தமற்றது என்று ருக்ஷான் பெலன்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சுகாதாரத்துறையின் தற்போதைய போராட்டம், அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்த அவர், பொதுமக்களை வீதிக்கு இறக்குவதே தொழிற்சங்கங்களின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



