கனடாவில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிறுவர் நல மருத்துவமனைகளில் கூடுதல் எண்ணிக்கையில் வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
RSV என்றால் என்ன
ஆர்.எஸ் வைரஸ் (respiratory syncytial virus) எனப்படும் வைரஸ் தொற்றினால் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பொதுவாக சளி போன்ற அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
உலகெங்கிலும் உள்ள இளம் குழந்தைகளில் குறைந்த சுவாசக்குழாய் நோய்க்கு இது மிகவும் பொதுவான காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரண சளி என்றாலும், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் மூச்சுக்குழாய் அழற்சி - நுரையீரலில் சிறிய காற்றுப்பாதைகளில் அடைப்பு - அல்லது நிமோனியா போன்ற கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது,
பாதிக்கப்படுவோர் யார்
“கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் இரண்டு வயதிற்குள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் எனவும், ஆனால் சில குழந்தைகள் இதனால் மிகவும் நோய்வாய்ப்படலாம்" என்று டொராண்டோ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தொற்று நோய் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் அன்னா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த RSV வைரஸ் ஒரு சாதாரண சுவாசக்கோளாறை உண்டாக்கும் வைரஸ்தான் என்றாலும், அது கைக்குழந்தைகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
இந்த RSV வைரஸ், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தொற்றை உருவாக்கும். இரண்டு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், மற்றும் ஏற்கனவே வேறு உடல் நலப் பிரச்சினைகள் உள்ள பெரியவர்களுக்கு இந்த வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சிசுக்கள் மற்றும் இருதய நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இதில் கூடுதல் பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய் அறிகுறி
பொதுவாக இந்த வைரஸ் தொற்று சளிக்காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் தொற்றினால் நியூமோனியா காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரவும் RSV வைரஸ்
இந்த RSV வைரஸ், தும்மல் மற்றும் இருமல் மூலமாக பரவும் என்பதால், தும்மும்போதும் இருமும்போதும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்வது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
அத்துடன், தொடுவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும். அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட இடத்தை மற்றவர்கள் தொட்டு, கண் அல்லது மூக்கைத் தேய்த்தாலும் இந்த வைரஸ் அவர்களைத் தொற்றிக்கொள்ளலாம்.
அண்மைய நாட்களில் கனடாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
May you like this Video