இறுதி கட்டத்தை நெருங்கிய ஐபிஎல்..! பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 4 அணிகள்
19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிய நிலையில், இன்று(24) நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது.
வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்
பிளே ஆப் தகுதிச்சுற்று
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து ஐ.பி.எல். 2026 பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன. இதன்படி, பிளே ஆப் தகுதிச்சுற்று 1(Qualifier 1) போட்டி வருகிற 26ஆம் திகதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2ஆவது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.
எலிமினேட்டர் சுற்று
அதே சமயம் தோற்கும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதும் எலிமினேட்டர் சுற்று(Eliminater) போட்டி வரும் 27ஆம்திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது.

இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
அதே சமயம் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று 1ல் தோற்ற அணியை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும். தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும், தகுதிச்சுற்று 1-ல் தோற்கும் அணியும் தகுதிச்சுற்று 2-ல் மோத உள்ளன.
இந்தப் போட்டி வரும் மே 29 ஆம் திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan