யாழில் வீடொன்றுக்குள் வாள்கள், கம்பிகளுடன் புகுந்த ரவுடிகள்(Photos)
யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் ஒரு தொகை பணத்துடன் தப்பிச் சென்றுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞன் ஒருவரை மற்றொரு இளைஞர் குழு தாக்கியுள்ளது.
இதனை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்து வாகனத்தை நிறுத்திவிட்டு சமாதானமாகப் பேசி பிரச்சினையை முடித்து வைக்க முயன்ற வேளை குறித்த குழுவினர் சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும் அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.
இதனையடுத்த அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறப்படும் நபர்களைக் கண்டதும் குறித்த குழு அங்கிருந்து சென்றது.
பின்பு சமாதானம் பேசுவதற்குச் சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறிய நபர்கள் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யுங்கள் எனத் தெரிவித்துச் சென்றிருந்தனர்.
அதன்படி அவர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த நிலையில், சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்துள்ளது.
அத்துடன் வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை ரவுடிகள் எடுத்துச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டார் கூறியுள்ளனர்.
வீட்டிற்குள் ரவுடிகள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் சம்பவ இடத்திற்கு நீண்டநேரமாக வரவில்லை எனவும் வீட்டார் கூறியுள்ளனர். எனினும் பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
