வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மற்றுமொரு முகவர் நிறுவனம்
கம்பஹா மீரிகம நகரில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் டுபாய்க்கான வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனம் அக்டோபர் 2024 இல் நிறுவப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு
குறித்த அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீரிகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க வெளிவிவகார அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சந்தேகநபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 16 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam