மன்னாரில் தரமற்ற பையில் ரொட்டியை சுருட்டி வைத்திருந்த உணவகத்திற்கு சீல்
மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான ரொட்டியை தரமற்ற மக்கும் தன்மை கொண்ட பையில் சுருட்டி கொத்து தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்றைய தினம் (20) குறித்த உணவகத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
அதேநேரம் குறித்த உணவகம் அனுமதியின்றி இயங்கி வந்ததுள்ளமை தெரியவந்துள்ளது.
வழக்கு தாக்கல்
உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை, உணவு தயாரிப்பவர்கள் கையுறை, தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் (20) ஒரு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்காமை, எண்ணெய் வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்பட நிலையில் குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam