ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு
சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நிமாலி ஆகியோரைக் கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதிவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் நடந்ததாக கூறப்படும் கையூட்டு தொடர்பான தொடர் நடவடிக்கைகளில், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை தொடர்ந்து இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பிடியாணை உத்தரவு
இலஞ்ச ஊழில் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். பொதரகம இந்த பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகவே இந்தத் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.