கடுமையாக தாக்கப்போவதாக டிரம்பின் அறிவிப்பு: ஈரானிடமிருந்து அமெரிக்க மக்களுக்கு அவசர செய்தி
ஈரான் மற்றும் அதன் உலகளாவிய பங்களிப்பைச் சுற்றியுள்ள தவறான தகவல்கள் மற்றும் புனையப்பட்ட கற்பனைகளுக்கு அப்பால் பார்க்குமாறு அமெரிக்க மக்களை வலியுறுத்தி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஒரு சிறப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், அமெரிக்கா - ஈரான் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்தாலும், சாதாரண அமெரிக்க குடிமக்கள் மீது ஈரான் எந்த மோதல் போக்கையும் கொண்டிருக்கவில்லை.
ஈரான் மக்கள் அமைதியையும் கௌரவத்தையும் விரும்புவர்கள். அமெரிக்க மக்கள் ஈரான் பற்றிய தவறான பிம்பத்தை விட்டு உண்மையை உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்கிரமடையும் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆரம்பித்த போர் தற்போது உக்கிரமடைந்து வருகிறது. இந்த தாக்குதலின் காரணமாக வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கடுமையாக தாக்க போவதாக தெரிவித்துள்ளார். ஈரான் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மேலும் தீவிரமடையலாம் என பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.