எதிர்க்கட்சிக்கு செல்லப்போவதாக ஊடகங்களில் தகவல் : ரொஷான் ரணசிங்க விளக்கம்
நான் எதிர்க்கட்சிக்கு செல்லப்போவதாக ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (13.12.2023) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மக்களுடைய கோரிக்கைகள்
“நான் மொட்டுக்கட்சியை கைவிட்டு எதிர்க்கட்சிக்கு செல்லப்போவதாக நாளிதழ்களில் சிலர் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் சிலர் என்னை எதிர்க்கட்சிக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கும் எதிராக வாக்களித்து அவர் எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நான் எதிர்க்கட்சிக்கு செல்லப்போவதில்லை என்பதோடு 69 இலட்சம் மக்களுடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன்” என தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
