மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைகின்றார் ரொனால்டோ! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் மீண்டும் இணைகிறார்.
யுவெண்டஸ் அணியில் இருந்து விலகிய ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய முன்னணி களகங்கள் போட்டியிட்ட நிலையில், மென்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி ரொனால்டோவை மென்செஸ்டர் யுனைடெட் அணி 25 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 6 பருவகாலங்களில் விளையாடியுள்ள ரொனால்டோ, 8 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். இவர் ஆடிய 292 ஆட்டங்களில் 118 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ரொனால்டோ, 2010 ஆம் ஆண்டு உலக கால் பந்தாட்ட விளையாட்டில் களமிறங்கினார்.
இதுவரையில் ரியல் மெட்ரிட் அணிக்காகவும், யுவெண்டஸ் அணிக்காவும் ஆடியுள்ள ரொனால்டோ, 2016 யூரோ கால்பந்து தொடரில் தலைவராக இருந்து போர்ச்சுக்கல் அணி கோப்பையை வெல்ல உதவினார்.
இந்த ஆண்ட இடம்பெற்ற யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்ததற்கான கோல்டன் பூட் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Welcome ????, @Cristiano ?#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
