இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் ரோமானியாவின் எல்லையில் தடுத்து வைப்பு
இலங்கை உட்பட்ட பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 18 பேர் கொண்ட புலம்பெயர்ந்தோரின் இரண்டு குழுக்கள், ரோமானியாவின் அராட் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரோமானியாவின் எல்லைப்பகுதியில் வைத்து அராட் எல்லைக் பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அராட் பொலிஸாரின் தகவலின்படி, நேற்று வியாழனன்று புலம்பெயர்ந்தோர் ஹங்கேரி எல்லையை நோக்கி நடந்து கொண்டிருந்த போது இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணை
தம்மை உரியவகையில் அடையாளப்பபடுத்தாமைக் காரணமாக அவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து, அவர்கள் 20 முதல் 48 வயதுக்குட்பட்ட இலங்கை,
பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள்
சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது
இதனையடுத்து அவர்கள் தொடர் விசாரணைகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
