ரோஹிதவின் மருமகன் பிணையில் விடுதலை!
புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடிக்கு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனுஷ்க வீரக்கொடியை இன்று(1) மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்திய வாகனம் ஒன்றைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக தனுஷ்க வீரக்கொடி கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி காலை மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




