மயிலிட்டி துறைமுகத்திற்கு சிறீதரன் எம்.பி கண்காணிப்பு விஜயம்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மயிலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம்(1) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய கடற்றொழிலாளர்களின் 140க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார்.
மீன் உற்பத்தி
குறிப்பாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக கடற்றொழிலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டி துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம்.
யுத்தத்துக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு ஒரு பங்கினை வகிக்கின்றது. ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறி கடற்றொழிலாளர்கள், பாதிப்படையும் செயலே காணப்படுகின்றது.
ஒத்திவைப்பு பிரேரணை
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த துறைமுகம் தேசிய பொருளாதார உற்பத்தியில் அளப்பெரிய பங்கினை ஆற்றியது. ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது.
இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து பேச உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




