பிரபல அரசியல்வாதியின் மகள் பொலிஸில் சரண்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி மெலனி குணவர்தன பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லேண்ட் குரூசர் ஜீப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்னை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றின் உத்தரவு
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோஹிதவின் மகள் மெலனி மற்றும் அவரது கணவரை கைது செய்யுமாறு மத்துகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், சில நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், தற்பொழுது மெலனி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்த இருவருக்கு எதிராகவும் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிதிருந்ததுடன் பொலிஸார் கைது செய்யும் நோக்கில் தேடுதல் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ரோஹிதவின் மகள் மெலனி, பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மெலனியை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
