வெற்றியின் பின்னர் கோட்டாபயவிற்கு பயத்துடன் அழைப்பெடுத்த சஜித் : பகிரங்கப்படுத்தும் ரோஹித(Video)
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடன், சஜித் அவருக்கு அழைப்பெடுத்து, “நான் அரசியலை விட்டுச் செல்லப் போகின்றேன், எனக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் சார். விலங்குகளை படம் எடுத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் போகின்றேன், எனக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் சார்” என்று பயந்து பயந்து பேசினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தாம் எதற்கும் பயமில்லை பயம் இல்லை என நீர் அருந்தி அருந்தி கூறினார். ஆனால் பொதுவாக மிகவும் பயந்த கோழைகளே தான் பயமில்லை பயம் இல்லை என கூறுவார்கள். மயானங்களுக்கு அருகாமையில் செல்லும் போது பேய்களுக்கு அஞ்சுபவர்கள் சத்தம் போட்டுக் கொண்டே செல்வார்கள் அல்லவா அவ்வாறுதான் இதுவும்.
சஜித் மிகவும் பயந்தவர்
2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதன் போது நான் அவர் அருகாமையில் இருந்தேன். கோட்டபாய ராஜபக்சவிற்கு அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது யாரிடமிருந்து தெரியுமா? சஜித் பிரேமதாசவே அந்த அழைப்பினை ஏற்படுத்தி இருந்தார்.
அழைப்பினை வருவதாக ஜனாதிபதி எனக்கு காண்பித்தார். நான் கூறினேன் ஆன்சர் பண்ணுங்கள் சார் என்று ஸ்பீக்கரை ஆன் செய்து ஜனாதிபதி அந்த தொலை தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளித்தார். அச்சமில்லாத சஜித் பிரேமதாச எவ்வாறு பேசினார் தெரியுமா “சார் எங்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற போகிறேன், விலங்குகளை படம் எடுத்துக்கொண்டு சந்தோசமாக இருக்க விரும்புகின்றேன், எங்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் சார் நாங்கள் கடன் பட்டு இருக்கிறோம் எங்கள் கால்கள் நடுங்குகின்றன” என கூறினார்.
இல்லை நான் யாருக்கும் தொல்லை கொடுக்க மாட்டேன் நீங்கள் அரசியலை செய்யுங்கள் ஜனாதிபதி கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி இந்த நாட்டுக்கு செய்துள்ள கடமைகளை நாம் மறந்து விடக்கூடாது அவ்வாறு பொறுப்புடன் நடந்து கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவர் சேறு பூசுகின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. கட்டி எழுப்பப்பட்ட பொருளாதாரமே எவ்வாறு வீழ்ச்சி அடைகிறது துறைமுக நகரம் போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
மகிந்த ராஜபக்ச செய்த காரணத்தினால் அவை நிறுத்தப்பட்டன. அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதிவேக நெடுஞ்சாலைகள் நிறுத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுக் கொண்டது.
ஆனால் அந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயத்தை கூற முடியுமா ? பொருளாதாரத்தை கட்டி எழுப்ப அவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு மின் உற்பத்தி நிலையம் அமைத்தார்களா? என்ன பொருளாதார வளர்ச்சிக்கு இடமளித்து இருந்தால் இன்று நாமும் ஒரு சிறந்த நாடாக இருந்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
