அரசாங்கத்தை விமர்சித்த ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து
ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர இலங்கை பௌத்த நாடு எனவும் தேசிய மக்கள் சக்தி வடக்கு தெற்கு தெரியாமல் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தலைமுறை கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இடதுசாரி வரலாற்றில் தவறிழைத்த முதல் படிமுறையே மதச்சார்பற்ற பல மத கலாசாரம் என்ற கொள்கையாகும். இலங்கை பௌத்த காலாசாரத்தில் கட்டி வளர்க்கப்பட்ட நாடாகும்.
அரசியலமைப்பை மீறும் கூற்று
அத்தோடு அரசியலமைப்பு சட்டத்திலும் காணப்படுகிறது. இரண்டாம் தலைமுறையும் அதை ஏற்றுக்கொள்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதை எவ்வாறு மறுக்க முடியும்.
உதாரணத்திற்கு நாம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் அவை கிறஸ்தவ நாடுகள். அதன் ஆட்சியாளர்கள் பைபிளில் சத்தியம் செய்தே பதவியேற்கின்றனர்.
அதேபோல் அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய மதத்தில் கட்டமைக்கப்பட்ட குர்ஆனை அடிப்படையாகக் கொண்டவை. ஜனநாயகம் நிறைந்த நாடான ஐக்கிய இராஜியத்திற்கு சென்று மதச்சார்பற்ற நாடு என்று கூற முடியாது.
அமைச்சர்களாக பதவியேற்று எட்டு மாதங்கள் முடிந்த இவர்களால் இலங்கை மதச்சார்ப்பற்ற நாடு என்று எவ்வாறு கூற முடியும்? இவை அரசியலமைப்பை மீறும் கூற்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




