காபூல் விமானநிலையம் மீதான உந்துகணைத் தாக்குதல் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது!!
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட உந்துகணைத்தாக்குல் வாகனம் ஒன்றின் உள்ளேயிருந்து நடத்தப்பட்டதையடுத்து காபூல் நகரில் சேவையில் ஈடுபடும் பொதுமக்கள் வாகனங்களின் மீதான கண்காணிப்பை தலிபான்கள் ஆதிகரித்துள்ளனர்.
காபூலின் கைர்கானா பகுதியில் உள்ள ஒரு வீதியில் இருந்து இந்த உந்துகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஏவுதலின் வெம்மைகாரணமாக அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது.
இதன்பின்னர் கருகிய வாகனத்தின் உள்ளே ஆறு உந்துகணை ஏவுதல் குழாய்கள் இருந்தமை வெளிப்பட்டிருந்தது.
இந்த உந்துகணைத்தாக்குதல் IS அமைப்பின் -K பிரிவு மூலம் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் இருந்து 5 உந்து கணைகள் வீசப்பட்டபோதிலும் காபுல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் C-RAM defense system எனப்படும் ஏவுகணை உந்துகணை தாக்குதல்களை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு பொறிமுறைகள் அவற்றை இடைமறித்தால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லையென அறிவிக்கபட்டுள்து.
ஆயினும் அருகில் இருந்த கட்டிடம் ஒன்றை இந்த உந்துகணைகளில் ஒன்று தாக்கியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறின.
இந்த தாக்குதலையடுத்து அந்தப்பகுதியை சுற்றிவளைத்த தலிபான் ஆயுததாரிகள் தேடுதல்களை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காபுல் விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த ஐஎஸ்ஸிள் தற்கொலை குண்டுதாரியை இலக்கு வைத்து நடத்தியதாக கூறப்பட்ட தற்காப்பு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
மாலை 5 மணியளவில் குடும்பத்தலைவர் தனது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல ஆயத்தமான போது வாகனத்தை உந்துகணை தாக்கியுள்ளது.
அவர்களின் வீடும் தாக்கப்பட்டபோது அங்கிருந்தவர்களும் கொல்லப்பட்டதாக அயலர்hகள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து தமது தரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

