இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த றொபர்ட் கப்ரோத்
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் றொபர்ட் கப்ரோத் இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
தமது பயணத்தின் போது கொழும்பில் உள்ள தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட்ட இலங்கை அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் சீர்திருத்த வளர்ச்சி
இலங்கையின் சமீபத்திய நுண்ணிய பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் மற்றும் கண்ணோட்டம் பற்றிய தெளிவான புரிதலைப்பெறுவதில் இந்த சந்திப்புக்களின் போது, கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கப்ரோத், இலங்கையின் சீர்திருத்தங்களை ஆழப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையவும் மேலும், தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |