வெளிநாட்டு பிரஜைகளின் 60 லட்சம் ரூபா கொள்ளை-ஹொட்டல் உரிமையாளர் உட்பட மூவர் கைது
காலி உணவட்டுன பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான சுமார் 60 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஹொட்டல் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான ஹொட்டலின் முகாமையாளர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹொட்டல் அறைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள்
சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த முதலாம் திகதி உணவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளனர். இதற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டனர்.
இதனடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து அங்கிருந்த 10 ஆயிரத்து 100அமெரிக்க டொலர்கள், ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரஷ்ய ரூபிள், 200 யூரோ என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
பொலிஸார் ஹொட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமரா கட்டமைப்பை பரிசோதித்த போது, அவற்றில் இருந்த காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து நீதிமன்றத்திற்கு அமைய சி.சி.டி.வி கட்டமைப்பு அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
