பூட்டியிருந்த வீட்டில் திருட்டு: சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு
அம்பாறை- அக்கரைப்பற்று பனங்காடு பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (11.07.2023) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் வேளாண்மை காவலுக்கு சென்றதையடுத்து அவரது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் தாயாரின் வீட்டிற்கு நித்திரைக்கா சென்று அடுத்தநாள் காலை வீடு திரும்பும்போதே இச்சம்பவம் இனங்காணப்பட்டுள்ளது.
பெறுமதியான பொருட்கள் கொள்ளை
வீட்டின் மேல்மாடி கடவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி, 2 பவுண் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தடவியல் பிரிவுனர் மோப்பநாய் சகிதம் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
