மட்டக்களப்பில் திருட்டு சம்பவம்: மூன்று மாதங்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
மட்டக்களப்பு- அரசடி சந்தி பிள்ளையார் ஆலய திருட்டு விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சுமார் மூன்று மாதங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (04.07.2023) இடம்பெற்றுள்ளது.
28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த (08.04.2023) ஆம் திகதி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி சந்திப் பிள்ளையார் ஆலையத்தில் மடப்பள்ளி அறையில் வைக்கப்பட்டிருந்த குருக்களின் கையடக்க தொலைபேசி, 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் திறப்பு கோர்வை என்பவன திருட்டுப் போயுள்ளது.
கமராவில் பதிவான ஆதாரம்
இந்த சம்பவம் தொடர்பாக சிசிரிவி கமராவில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் நீதிமன்ற வீதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அரசடி சந்தி பிள்ளையர் ஆரவய திருட்டு மற்றும் இருதயபுரத்தில் வீடு ஒன்றில் கையடக்க தொலைபேசி திருட்டு, போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி திருட்டு போன்ற சம்பவங்களிவல் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |