வட்டுக்கோட்டையில் இருவரிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, செட்டியார் மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாண கல்லூரியின் பின் வீதி பகுதிகளில் வைத்து இருவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் கைப்பைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய கைப்பைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரிடமும் கைப்பைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் ஒரே தரப்பைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
